1.இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
2.இணைய வழி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
3.மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணைய வழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
4.இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி உதவி எண் கூடிய விரைவில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.
5.இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத்தடுப்பு காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.