திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட – 1. மன்னார்குடி நகர காவல் நிலைய பகுதியில் செந்தில்குமார் (54/24). த/பெ. கோபாலகிருஷ்ணன், ராஜன் தெரு, மன்னார்குடி, 2. ராஜேந்திரன் (51/24). த/பெ. முத்து, அரிசிகடைத்தெரு, மன்னார்குடி, 3. நீடாமங்கலம் காவல் சரகத்தில் கிருஷ்ணமூர்த்தி (52/24). த/பெ. மருதன், தெற்கு தெரு, ஒரத்தூர், 4. திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் கோவிந்தராஜ் (54/24).த/பெ. வெள்ளைச்சாமி, வடக்கு தெரு, நெடும்பலம் ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc. ,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள். மேலும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராகவும், கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்தல், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.