திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஆலங்காடு பேருந்து நிறுத்தம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பேட்டை, உப்பூர், காசடி கொல்லை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் சாமிநாதன் (வயது-57). என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருS.ஜெயக்குமார் M.Sc(Agri).,* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.