திருவாரூர் : திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர், துர்க்காலயா ரோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன்கள் 1.ரமேஷ் குமார் (வயது -42). மற்றும் 2.விஜய் ஆனந்த் (வயது -46). ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து செல்போன் – 3 மற்றும் பணம் ரூபாய் 2,700/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருS.ஜெயக்குமார் M.Sc(Agri).,* அவர்கள் எச்சரித்துள்ளர்கள்.