விழுப்புரம் : விழுப்புரம் திண்டிவனம், திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான போலீசார் திண்டிவனம் கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (27), என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகளை செல்போன் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 3 செல்போன்கள், ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.