சிவகங்கை : காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்களின் மேற்பார்வையில் தனிப்படையினரால் குன்றக்குடி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட குன்றக்குடி பஸ் ஸ்டாப் பின்புறம் ஆறு கால் மண்டபம் அருகே சீனிவாசன் (26), திருப்பத்தூர் மெயின் ரோடு, குன்றக்குடி என்பவர் செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். மேலும் இவர் வாங்கிய லாட்டரி சீட்டின் தலைமை இடமாக செயல்பட்டு வரும் நபர்கள் யார் என்பதை கேட்டறிந்து அவர்கள் ஈரோட்டில் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் சந்திரசேகர் வயது (48), கருங்கல்பாளையம், ஈரோடு மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு லேப்டாப்புகள், ஒரு இன்னோவா கார் TN45 BF8386, செல்போன்-4 ஆகியவை கைப்பற்றப்பட்டு தற்போது குன்றக்குடி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். உடன் குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய தேவகி அவர்கள், தனிப்படை சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய உதயகுமார் அவர்கள், மற்றும் தனிப்படையை சார்ந்த காவல் ஆளீநர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி