நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ரவி செல்வன் (வயது 40) நேற்று (ஜூன் 8) மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து மயங்கியுள்ளார். உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவல்துறை விசாரணையில், லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால், அவர் இம்முடிவை எடுத்ததாகத் தெரியவந்தது.