நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 9,73,513 பணத்தை மீட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர். இ.கா.ப அவர்கள் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரா. திவ்யா,சிக்கல், நாகப்பட்டினம்,MAX LIFE INSURANCE லிருந்து பேசுவதாக கூறி ரூ.80,222 பணத்தை இணைய வழியில் மோசடி செய்துள்ளார்கள். வீ. உதயகுமார் தலை ஞாயிறு, நாகப்பட்டினம், whats app வழியாக தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் switzerland உள்ள marine company ல் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.150,000/- பணத்தை இணைய வழியில் மோசடி செய்துள்ளார்கள்.
ந. பாலச்சந்திரன், தெற்கு பொய்கை நல்லூர், நாகப்பட்டினம். தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4,98,492/- பணத்தை இணையவழியில் மோசடி செய்துள்ளார்கள்.
,செள. கலைவாணன், கிச்சான் குப்பம், நாகப்பட்டினம்,sbi maneger பேசுவதாக கூறி link யை அனுப்பி அதனை click செய்யுங்கள் என்று சொல்லி ரூ.2,44,799/- பணத்தை இணைய வழியில் மோசடி செய்துள்ளார்கள். இவ்வாறு மோசடியில் ஈடுபட்டோரின் வங்கி கணக்குகளை முடக்கியும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குற்றச்சன்ப்பவத்தை துரிதமாக நடவடிக்கை எடுத்து குறுகிய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை ஒப்படைத்த நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். மேலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் இணையத்திலும்,1930 என்ற இலவச தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.