திருச்சி : திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார், இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.மதியழகன் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கடந்த 2021-ம் வருடம் ஏப்ரல் மாதம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் மாயவேல் வயது (32), என்ற நபருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிதருவதாக வாட்ஸ்ஆப் மூலம் ஆசை வார்த்தை கூறி சைபர்கிரைம் குற்றவாளி ரூ.4,00,000-யை வங்கி கணக்கு மூலம் பெற்று ஏமாற்றிவிட்டதாக பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து (09.03.2022)-ம் தேதி குற்ற எண் 03/2022- ச/பி 66D of IT act & 420 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.P.வாணி, காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ், காவலர்கள் சதீஷ்குமார், வேல்முருகன், முத்துசாமி, ஆகேியோர் கொண்ட குழுவினர் (02.11.2022)-ம் தேதி மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை தேடி சென்னை புறப்பட்டு சென்று அங்கு கொட்டிவாக்கம் பகுதியில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, சாத்தனூர் அஞ்சல் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்கிற மரிய ரஞ்சித் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து புகார்தாரர் இழந்த பணம் ரூபாய் 4 இலட்சம், மற்றும் 09 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி (03.11.2022) -ம் தேதி பெரம்பலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-II-ல் நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும்,, குறைந்தவட்டியில் கடன் தருவதாகவும், வேலைவாய்ப்பு தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவரின் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் , மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி இணையதள குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்.