தஞ்சாவூர் : அக்.5- கும்பகோணம் நகரப் பகுதியில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடந்து வருவதாக கும்பகோணம் காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஷ் ராவத் ஐ.பி.எஸ் அவர்களின், உத்தரவு படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் டி.பி.எஸ் அவர்கள், மேற்பார்வையில் கும்பகோணம் தாலுக்கா காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் ,SSI செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியன், ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சில நபர்கள் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் (ஆன்லைன் விபச்சாரம் ) பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு இருந்த திருபுவனம் பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் பௌண்டரிகபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமி ஆகிய பெண்கள் இருவரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனம், எட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நேற்று( 4-10-2023) நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இங்கு மேற்படி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை போலீசார் தஞ்சாவூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார்கள் . தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்