கோவை: கோவையில் ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றிய நபர் கைது கோவை மாவட்டத்தில் பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்களை தொடர்பு கொண்டு பேஷன் ஷோ நடத்தப்படுவதாக கூறி கோவை மாநகரில் பல பெண்களை ஏமாற்றி வந்த கோவை இருகூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நபரால் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகுமாறு காவல் ஆய்வாளர் அருண் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்