தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த R.கார்த்திக் என்பவர் வங்கி கணக்கில் இருந்து அவரின் அனுமதியின்றி ரூபாய் 2000/– பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்து ஆன்லைனில் Customer care எண்ணை தேடிதவறான Customer care எண்ணை அழைத்ததில் அவர்கள் அவருடைய மொபைலில் Any Desk APP –ஐ Install செய்ய சொன்னதாகவும், அவர் அதை Install செய்த சிறிது நேரத்தில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 18000/- பணம் காணாமல் போனதை அறிந்துள்ளார். காணாமல் போன பணத்தை மீட்க www.cybercrime.org.in என்ற இணையதளத்தில் புகார் கொடுத்துள்ளார். பதிவு செய்யப்பட்ட 48-மணி நேரத்தில் தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு 07.03.2022 அன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.S.புஷ்பராஜ் அவர்கள் R.கார்த்திக் என்பவரிடம் ரூபாய் 18000/-ஐ ஒப்படைத்தார். பின்பு இது போன்ற பணமோசடி புகார்களுக்கு 9301என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும் www.cybercrime.org.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யவும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.