வேலூர்: ஜம்மு காஷ்மீரில் பணி புரியும் காட்பாடி மெட்டுகுளம் பகுதியை சேர்ந்த திரு.ஆனந்த் என்ற இராணுவ வீரரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன முறையில் திருடப்பட்ட 78235/- பணத்தை வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்கள் இன்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.