சென்னை: சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், ஆன்லைன் பெட்டிங்கிற்காக பணம் கட்டி சுமார் ரூ.87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.P.C.தேன்மொழி, இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்பேரில்,
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் திருமதி. G.நாகஜோதி ஆலோசனையில், சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையாளர் திருமதி.B.H.ஷாஜிதா மேற்பார்வையில், உதவி ஆணையாளர் திரு.ராகவேந்திரா திரு.K.ரவி தலைமையில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணையில், ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்து, பிறகு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது தெரியவந்தது.
இதன்பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர், விசாரணை மேற்கொண்டு, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
மேற்படி குற்ற குற்றவாளியிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், பணம் ரூ.24,68,300/-, 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேட் மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது.மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்