சேலம் : சேலம் மாவட்டம், எடப்பாடி சேர்ந்த கார்த்திக் (25), என்பவர் தனது whatsapp DP யில் வைத்திருந்த குடும்ப புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து முகநூலில் பதிவிட்டு அதனை நீக்க பணம் கேட்டு மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு சமர்ப்பித்திருந்தார் மேற்படி புகார் மனு தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ், அவர்களின் உத்தரவுப்படி கூடுதலு காவல் கண்காணிப்பாளர் திரு. AC செல்ல பாண்டியன், அவர்களின் மேற்பார்வையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.கைலாசம், அவர்கள் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கையின் பெயரில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தூத்துக்குடி குமரகிரி பகுதியை சேர்ந்த சரத்குமார் (30), என்பவரை கைது செய்து சிறை காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இவர் இதுபோன்று பல நபர்களிடம் மிரட்டி பணம் பெற்றதாக விசாரணையில் தெரிய வருகிறது எனவே பொதுமக்கள் தங்களின் புகைப்படங்களை தேவையின்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தவிர்க்கும் படியும் வாட்ஸ்அப் DPயை VIEW MY CONTACTS (OR) NOBODY எனவும் facebook ப்ரொபைலை லாக் செய்து வைக்கவும் மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930 www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே புகார் அடித்தால் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் சேலம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு .செல்லப்பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்