கோவை : கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூர் போஸ்டல் காலனி குறிஞ்சி நகரில், உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி கார்களும் இருசக்கர வாகனங்களும் வந்து சென்று கொண்டிருந்தன. சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.
காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திரு.சீனிவாசலு, இன்ஸ்பெக்டர் திரு.சுகவனம், எஸ் ஐ ஜான் திரு.ரோஸ் ஆகியோர் நேற்று இரவு அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்குவிபச்சாரம் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த கோவை கரும்புக்கடை பிஸ்மி நகரைச் சேர்ந்த அபுதாகிர் வயது 40, சென்னை சூளை வெங்கடாசல முதலியார் வீதியைச் சேர்ந்த கவரிங் நகை வியாபாரி சுரேஷ் ஜெயின் வயது 48. குறிஞ்சி நகர் பிரியா வயது 29, நதியா வயது 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு லட்சம் பணம் மற்றும் கருத்தடை தடுப்பு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் தரகர்களை நியமித்து ஆன்லைன் மூலம் அழகிகளை காட்டி விபச்சாரபுக்கிங் செய்தது, தெரிய வந்தது. இவர்களில் நதியா சங்கனூர் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பிரியா, பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். சுரேஷ் ஜெயின் சென்னையில் கவரிங் நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி இங்கு வந்து செல்வாராம். இதேபோல நேற்று அங்கு வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார்.
இந்த வீட்டை ரூ 10,000 மாத வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர்.இந்த வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் வசித்து வருகிறார். புரோக்கர்கள் மூலம் வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள், குடியிருப்பவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா? என்பதை தெரிந்து, வீடுகளை வாடகைக்கு விட வேண்டும். குடியிருப்போர் செயல் பாடுகளையும், கண்காணிக்க வேண்டும் என்று டிஎஸ்பி சீனிவாசலு அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்