வேலூர் : வேலூர் மாவட்டத்தில், ஒடுகத்துர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்து ரூ.11585 பணத்தை இழந்ததாகவும், சாத்து மதுரையை சார்ந்த ஜெயமாலா என்பவருக்கு வேலூர் விமான நிலையத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி 28,519 ரூபாயை அபகரித்ததாகவும், பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்த விஷால் ஆதித் எனும் IT ஊழியர் PAN கார்டு இணைக்குமாறு வந்த link – ஐ நம்பி , விவரங்கள் கொடுத்து ரூ.65000 இழந்ததாகவும், வசந்தபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரும் இதே போல ரூ.10000 பணத்தை பறிகொடுத்ததாகவும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார் இவர்கள் இழந்த ரூ.1,15,000/- பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.D.குணசேகரன் அவர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன், அவர்கள் பேசுகையில் Call, SMS or link வாயிலாக வங்கி விவரங்களை பகிர கூடாது எனவும், ஆன்லைனில் உலவும் போலியான வேலை வாய்ப்பு விவரங்களை நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சைபர் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்