காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தியதற்கிணங்கமாவட்ட முழுவதும் இரண்டு மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மூலமாகவும் மற்றும் முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
(15.09.2021) அன்று சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருந்தஒச்சப்பன் 42. மதுரை மாவட்டம் என்பவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் விசாரணை செய்தபோது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருச்சி மாவட்டத்திற்கு சுமார் 9 கிலோ கஞ்சா போதை பொருளினை கடத்த முயன்றது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு.
சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் அவர்கள் ரோந்து பணியில் சிறப்பாக பணிபுரிந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்களை வெகுவாக பாராட்டினார்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.