கோவை: கல்லூரி மாணவர் களுக்கு சப்ளை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிங்கநல்லூர் பகுதியில் இன்று போலீஸ் துணை சூப்பிரெண்டு மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுமித்ரா மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்,
அப்போது சந்தேகத்தின் இருசக்கர வாகனத்தில் சிங்கநல்லூர் பஸ் நிலையம் அருகில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்த போது அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் ( வயது 44 ) என்பது தெரியவந்தது.
இவர் நபர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பைக்கில் 21கிலோ கஞ்சாவை கோவையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவும் .,பைக்கும் பறிமுதல் செய்யபட்டது. அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.