மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டி காலணி சுடுகாட்டு பகுதியில் நான்கு நபர்கள் கஞ்சா விற்பணை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த (12.03.2023),ம் தேதி உசிலம்பட்டி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகிய திரு. அருண்குமார், மற்றும் அவரது தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக 24 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (29), மதுரை மாநகரைச் சேர்ந்த சரவணன் (26) மேலமடை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகம் அன்னமார்பட்டியை சேர்ந்த பிரசாத் (29), கருக்கட்டான்பட்டியை சேர்ந்த நாகேந்திரன் (28), ஆகியோர்கள் மீது உசிலம்பட்டி நகர் காவல் நிலைய குற்ற எண் 112/2023 ன் படி 12.03.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் சுர்லா கீதா 26/23 W/0 சுர்லா கோவிந்தா ஆந்திரப் பிரதேசம், 1வது தெரு யானைமனகுத்துரு (po) கிருஷ்ணா மாவட்டம்,விஜயவாடா
என்பவரிடம் கஞ்சா மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வாங்கி வந்ததாக தெரிய வந்தது. அதன்படி மேற்படி குற்றவாளியை கைது செய்ய, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படியும் செக்காணூரனி காவல் ஆய்வாளர் திருமதி. சிவசக்தி அவர்களின் தலைமையில் சார் அருண் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை 1/2 இத்தனிப்படையினரின் தீவிர முயற்சியால் மேற்படி குற்றவாளியான கீதா (எ) சுர்லா ஆந்திரா மாநிலத்தில் வைத்து கைது செய்தபோது அவரிடம் இருந்த 69 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும் விசாரணைக்கு பின்பு (18.03.2023) அன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு தற்பொழுது மதுரை மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி கீதா (எ) சுர்லா கீதாவின் கூட்டாளிகள் பற்றி விசாரனை செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் இது போன்று ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி சுடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
திரு.விஜயராஜ்