தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன், மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார், தலைமையிலான தனிப்படை போலீசார் (26.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தெற்கு ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோன் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொற்கை மணலூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் (41), மாரிமுத்து (39), பொன்ராஜ் (35) மற்றும் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (46) ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்படி குடோனில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான ஜெயமுருகன், மாரிமுத்து, பொன்ராஜ் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,08,200/- மதிப்புள்ள 61 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 53,200/-யும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.