நெல்லை : நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாவதை முன்னிட்டு கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக பாளையங்கோட்டை ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் கலந்து கொண்டு ஆதிதிராவிட மாணவியர்களுக்கு நலதிட்ட உதவிகள் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் துணை ஆணையர் திரு.சரவணன், கடந்த வாரம் இவ்விடுதியில் நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு மேஜை, நாற்காலிகள, மைக், ஆம்ளிஃபையர், நூலகத்திற்கு புத்தகம் தேவைப்படுவதாக கூறினர். அதனை நற்பணி இயக்கத்தினரிடம் தெரிவித்த போது நான்கே நாட்களில் அனைத்தையும் செய்து கொடுத்தனர். நலத்திட்ட உதவிகள் செய்த நெல்லை மாநகர தனுஷ் நற்பணி மன்றத்திற்கு, திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிப்பதாக கூறினார். மேலும், நிகழ்வை ஒருங்கிணைந்த விடுதி காப்பாளர் மற்றும் வுஏஆஊர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்