காஞ்சிபுரம்: (08.03.2024)-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் AJS மஹாலில் காலை 11.00 மணியளவில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம், அவர்களின் உத்தரவின் பேரில் (Mass Awareness) நடத்தப்பட்டது. இவ்விழாவில் S.பாலகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு (பொ) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காஞ்சிபுரம் அவர்கள், திருமதி. M.சத்யா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (i/c) காஞ்சிபுரம் அவர்கள், தாட்க்கோ அலுவலக உதவி மேலாளர், காஞ்சிபுரம் திரு.M.விவேகானந்தன் அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர், காஞ்சிபுரம் திருமதி.M.ஷாமளா அவர்கள், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கீழம்பி தலைமை ஆசிரியர் திரு.V.ரமேஷ்குமார் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் திரு. பாசறை அ.செல்வராஜ், திரு.S.மோகன், திரு.செ.உலகநாதன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி. மகாலக்ஷ்மி ராஜசேகர் (கீழம்பி), திருமதி. வசந்தி அருள்நாதன் (விப்பேடு) மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காஞ்சிபுரம், SI.திரு.K.ராஜேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் திரு. K.ஆறுமுகம், SSI. Tr. V. சங்கர் மற்றும் தலைமை காவலர் 289 திருமதி.சரசு, தலைமை காவலர் 1953 திருமதி.காயத்ரி, முதல் நிலை காவலர் 1789 திருமதி.அருட்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்டங்கள் குறித்தும் ஒன்றினிவோம், சமத்துவம் காண்போம் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது.