தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி 34 என்பவரை சிவகிரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு.ராஜவேல் அவர்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 9,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்த திருமலையாண்டி என்பவர் மகன் தடிசெல்வம் 47 மற்றும் செங்கோட்டை KC ரோடு குட்டியப்பா என்பவரின் மகன் சுரேஷ் 45 ஆகியோருக்கு செங்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரு.சுனில் குமார் அவர்கள் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 23,000 தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேற்படி வழக்குகளில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்..