திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தொப்பம்பட்டி அருகே சாலையின் ஓரத்தில் சுமார் 80 வயதுள்ள மூதாட்டி மழையில் நனைந்தபடி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வனிதாமணி அவர்கள் மேற்படி சம்பவ இடம் சென்று ஆதரவின்றி இருந்த மூதாட்டியை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகளை மாற்றி உணவு வாங்கிக் கொடுத்தார்கள்.
மேலும் மூதாட்டியின் பாதுகாப்பு கருதி அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார்கள். காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா