திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் கூடையில் வைக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை யாரும் இல்லாத நிலையில் காணப்பட்டது. துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயதேவி அவர்கள் குழந்தையை மீட்டெடுத்தார். அந்த 3 மாத பெண் குழந்தையை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சைல்டு லைன் அமைப்பிற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டது.