விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலையம். காரியாபட்டியில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.மூக்கன் அவர்கள் உத்தரவின் பேரில்
காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அசோக் குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர்கள் திரு. சிவபாலன் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோர் மூதாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை பத்திரமாக மீட்டு விசாரித்தபோது.
அவரது சகோதரி மகன் மதுரையில் இருப்பதாக தெரிந்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் என்னால் பராமரிக்க முடியாது என கைவிட்டதால்,
காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து பின்னர் அருப்புக்கோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர்.
இந்த செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் IPS., அவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.