திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்துகிடந்தார். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் குறித்த விபரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து மூதாட்டியின் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என தெரியவந்ததை அடுத்து வடமதுரை காவல் நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்கள் தனது சொந்த செலவில் மூதாட்டியின் உடலை அமரர் ஊர்தியில் கோவிந்தாபுரம் மயானத்திற்கு கொண்டு சென்று இறுதிசடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
