நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகர பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சீதாராமனின் உறவினர்களை யாரென தெரியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உரிய இடத்தில் சேர்க்க நாகப்பட்டினம் மாவட்ட வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விவேக்ரவிராஜ் அவர்கள் சீர்காழியில் உள்ள தனியார் மனநலம் மற்றும் மறுவாழ்வு மையத்தை தொடர்பு கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சீதாராமனை உங்கள் காப்பகத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மனநலம் காப்பகத்தில் இருந்து வந்தவர்கள் சீதாராமனை அழைத்து சென்றனர். உதவி ஆய்வாளர் திரு.விவேக்ரவிராஜ் அவர்களின் இந்த மனிதநேயம் மிக்க செயலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.