சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் காவல் துறையினர் செயல்படுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் நடை ரோந்து திட்டம் (Foot Patrolling). அறிமுகப்படுத்தப்பட்டு காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு முருகேசன் தலைமையில் காவலர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 25.10.2020 அன்று நடை ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது கே.எம்.சி பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த சன்னியாசிராவ் என்ற 65 வயது உடைய முதியோருக்கு உணவு தண்ணீர் ஆகியவை வழங்கி சென்னை மாநகராட்சி தங்கும் விடுதியில் தங்க வைத்து பின்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருணை இல்லத்திற்கு ஒரு காவலர் மூலம் அனுப்பி வைத்தனர். அந்த முதியவர் சன்னியாசிராவ் உடல் நலம் இன்றி இருந்த தன்னை கருணை இல்லத்துக்கு அனுப்பி வைத்ததற்காக காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்