சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மதிய வேளை உணவு ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார். மேலும் 144 தடை உத்தரவு முடியும் வரை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இச்செயலின் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டியதுடன் காவல்துறை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் அதிகரித்துள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்