தேனி: தேனிமாவட்டம் ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.K.முத்துமணி மற்றும் காவல் நிலைய காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு
கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவர் தொழில் நஷ்டத்தாலும், மனைவி இறந்ததாலும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரத்தில் மழையில் நனைந்தபடி இருந்துள்ளார்.
உத்தமபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.ஸ்ரேயா குப்தா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.முத்துமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு புதிய ஆடை வாங்கி அணிவித்தும், உணவு வாங்கி கொடுத்தும் பத்திரமாக அவரை வாகனத்தில் ஏற்றி ஆண்டிபட்டி மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினரின் தன்னலமற்ற சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.