தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 26.03.2020ம் தேதி முதல் 21நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், வீடற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. மற்றும் அந்தப் பகுதிவாழ் தினக்கூலி பணியாளர்கள் நிலைமை இன்னும் மோசமானது.
இந்நிலையில், அவர்களின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறையின்படி காவல்துறையினர் சார்பில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கே சென்று உணவை கொடுத்து வருகின்றனர்.
காவல்துறையினரின் கடுமையான பணிகளின் இடையே ஆதரவற்றவர்களிடம் கருணையோடு நடந்து கொள்வது பாராட்டுக்குரிய செயல்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி