திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசாரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் செல்லமுத்து உதவியுடன் 50 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை டிஎஸ்பி.மணிமாறன் வழங்கினார்.
இதில் ஆய்வாளர். கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் அபுதல்ஹா, ஜான்சன் ஜெயக்குமார் தன்னார்வலர் செல்லமுத்து மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள்.
இதில் டி.எஸ்.பி. மணிமாறன் பேசியதாவது: போலீசார் தொண்டுள்ளதுடன் மக்களுக்கு உதவ வேண்டும். மக்களுடன் நண்பர்களாக பழகினால் தான் சமூக விரோதிகள் நமக்கு தெரியும். ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும். தன்னார்வலர்களை நான் பாராட்டுகிறேன், என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா