சென்னை: “காவல்துறை உங்கள் நண்பன்” மக்களின் இந்த நம்பிக்கை, சாத்தான்குளம் போன்ற சம்பவங்களால் அவ்வப்போது தகர்ந்து போவது உண்டு. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சுமத்த முடியாது அல்லது குறை சொல்ல முடியாது. இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையில் படுகின்ற கறையை துடைப்பதற்காக பல காவலர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். கீழ்காணும் மனிதநேய செயலே சிறந்த எடுத்துக்காட்டு.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்ச கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏழை எளிய மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உணவுக்கே வழியின்றி தவித்து வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மா.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்