இராமநாதபுரம்: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இதனால்
ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த ஆதரவற்ற மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் உணவின்றி பசியால் வாடி வந்தனர் . இதனை அறிந்த ராமேஸ்வரம் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்