சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைத் திடலில் கடந்த 25.09.2020 அன்று பெயர், ஊர் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைபற்றி திருப்புவனம் காவல் நிலையத்தில் u/s -174 Crpc -ன் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரேதமானது திருப்புவனம் GH-ல் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக 5 நாட்கள் வைத்திருந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் 25.09.2020 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் திருப்புவனம் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் தலைமை காவலர் திரு.சித்திரவேல் அவர்களின் தலைமையில் இறந்த நபரின் உடலுக்கு தக்க மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை