திருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டு பணகுடி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது .
இதனிடையே காவல்கிணறு வடக்கன்குளம் பணகுடி பகுதிகளில் ரோடு ஓரங்களிலும் இரவு நேரங்களில் காம்ப்ளக்ஸ் பகுதிகளிலும் ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வருவதைக் கண்ட பணகுடி ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது ,உதவி காவல் ஆய்வாளர் திரு அன்றோ பிரதீப் , திரு ஜமால் மற்றும் போலீசார் தனியார் சமையல் கூடத்தை அணுகி ஆதரவற்றவர்களுக்கு உணவு தயாரித்து வினியோகம் செய்தனர். கூடுதலாக பழங்களையும் பாதுகாப்பு நலன் கருதி மாஸ்க் வழங்கினர்.
ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று பணகுடி ஆய்வாளர் தெரிவித்தார். பணகுடி ஆய்வாளரின் இத்தகைய மனிதநேயமிக்க செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.