சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிழற்குடையில் கடந்த 31.01.2021 அன்று பெயர், ஊர் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் u/s -174 Crpc -ன் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரேதமானது சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக 5 நாட்கள் வைத்திருந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் 05.02.2021 இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிவகங்கை நகர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் திரு. கௌரி மற்றும் முதல்நிலைக் காவலர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இறந்த நபரின் உடலுக்கு தக்க மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி