கோவை: கோவை பீளமேடு குப்புசாமி நாயுடு லே அவுட்டை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் ( வயது 72) இவர் வைசியாள் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் பணி புரியும் நிறுவனத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் இவர் எப்படி செத்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கடைவீதி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 55) இவர் அங்குள்ள புட்டுவிக்கி அய்யாசாமி கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று கோவில் பின்புறம் உள்ள பாத்ரூமில் இவர் மயங்கிக் கிடந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து இவரது தம்பி வேலு மயில்சாமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.