திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுநல சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் அமைத்து அதனை பொன்னேரி வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் வ.சே. ராஜா, இந்திய குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர் கே.தனராஜ், சமூக ஆர்வலர் ஆதி சுந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மோசஸ் கோபி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுநல சங்க தலைவர் செந்தமிழன், செயலாளர் கோவிந்தராஜ் பொருளாளர் ஹாஜா ஷெரிப் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு