மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அண்ணாநகர் காவல் சரக பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களினால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும் ஒழுங்கீனமாகவும் செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை















