பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறையினர் போன்று பொது மக்களிடம் அதிகம் தொடர்பு கொண்டுள்ளது ஓட்டுநர்களான தாங்கள் தான் எனவும் தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் மாவட்ட காவல்துறைக்கு எப்போதும் வேண்டும் எனவும் பணிவுடன் தெரிவித்தும், பின்னர் 1.ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோவில் ஏதேனும் ஆயுதம் வைத்துக்கொண்டு வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும், 2. ஆட்டோவில் பயணம் செய்யும் போது ஏதேனும் குற்ற சம்பவங்கள் குறித்து பேசி வந்தார்கள் என்றால் அதனை சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், 3. மேலும் தாங்கள் பயணம் செய்யும் சாலையில் யாரேனும் ஆயுதங்களுடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது விபரத்தினையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தாங்கள் கூறும் தகவல் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறினார்கள்.
மேற்படி கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் உட்கோட்டத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு
பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சஞ்சிவ்குமார் அவர்களின் தலைமையிலும், மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா அவர்கள் தலைமையிலும் நடைப்பெற்றது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.