சேலம் : வாழப்பாடி உட்கோட்டம், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லை பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள மணிமாறன் (26), பழனி பேட்டை தெரு என்பவரை (19/ 0/7/2014),ஆம் தேதி அடையாளம் தெரியாத (35), வயது மதிக்கத்தக்க நபர் உமையால் புறம் செல்ல வேண்டும் என்று வாடகைக்கு பேசி உமையாள்புரம் சென்றவர் உமையாள்புரம் பச்சை கோவில் அருகில், சென்றவுடன் ஆட்டோ நிறுத்தும்படி கூறி அருகில் இருந்து இரண்டு நபர்கள் வந்து ஆட்டோ ஓட்டுனரை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டு மூன்று நபர்களும் ஆட்டோவை கடத்திச் சென்று விட்டனர். இது சம்பந்தமாக ஆட்டோ ஓட்டுனர் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில், பிரிவு 394/ 397/ 34 /ஐ.பி.ச,ஆக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கௌதம் (33), சிங்கிபுரம் மணிகண்டன் (31) வாழப்பாடி மதன் குரு (30), வாழப்பாடி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது இந்நிலையில் காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (29/08/2022)-ம் தேதி நீதிபதி திரு. ஆனந்தன் அவர்களால் குற்றவாளி கௌதம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து மணிகண்டன் மற்றும் அதன் குரு ஆகியோருக்கும் தலாம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் குற்றவாளி கௌதம் கோவை சிறைக்கும் மணிகண்டன் மற்றும் மதன் குருசாகி வரை இணையத்தில் விடுவித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்