இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மங்கலம் சாலை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஆட்டோவில் மணல் அள்ளிய தவமுருகன் என்பவரை SI திரு.கார்த்திகை ராஜா அவர்கள் Mines & Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.
சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 16.10.2020-ம் தேதி அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக் என்பவரை SI திரு.சரவணன் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்தார்.
மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா பயிற்சி மற்றும் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இன்று (17.10.2020) மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா பயிற்சி மற்றும் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு கலவரம் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பயிற்சி, போக்குவரத்தை சீர் செய்யும் முறை போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பொது மக்களுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.