சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடி பிறஸ் 58. என்பவர் என்பவர் கடந்த 20.02.2022 அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் பெரம்பூர், பேரக்ஸ் ரோட்டில் உள்ள லெட்சுமி திருமணம் மண்டபம் அருகே 2 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புரசைவாக்கம், சரவணா ஸ்டோர்ஸ் அருகே இறக்கிவிட்டு விட்டு பின்னர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் (21.02.2022) காலை ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடி பிறஸ் ஆட்டோவை சுத்தம் செய்த போது, சுமார் 9 கிராம் எடையுள்ள 1 தங்க கைச்செயின் ஆட்டோவின் சீட்டில் கிடந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடி பிறஸ் மேற்படி தங்க கைச்செயினை எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்க கோரினார். வேப்பேரி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆட்டோவில் பயணி தவறவிட்ட 9 கிராம் எடையுள்ள தங்க கைச்செயினை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடிபிறஸ் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (02.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.