சென்னை: சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, அடையார் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.செல்வகுமார் மற்றும் J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் (24.06.2021) அன்று மாலை சிங்காரவேலன் முதல் தெரு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது,
அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் வந்த 5 நபர்களையும் நிறுத்தி விசாரணை செய்தபோது, சந்தேகத்தின்பேரில் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வந்த 1.ராம்குமார், வ/31, திருவொற்றியூர், 2.சரவணன், வ/22, மதுரை, 3.ஜோசப், வ/26, திருவான்மியூர், 4.ஜெகதீஸ்வரன், வ/27, நுங்கம்பாக்கம், 5.செந்தில், வ/35, நீலாங்கரை, ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 1 சரக்கு ஆட்டோ, 1 இருசக்கர வாகனம், 5 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.1760/- கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.