உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெக்கோங்கஞ்ச் பகுதியில், ஆடுஒன்று சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டை கைது செய்த காவல்துறையினர் தங்களுடைய ஜீப்பில் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். ஆடு கைது செய்யப்பட்டதை கண்ட அதன் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய ஆட்டை விடுவிக்கும்படி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடைசியில் ஆட்டை விடுவிக்க ஒப்புக்கொண்ட காவல்துறையினர் சாலையில் சுற்றித்திரிய அனுமதிக்க வேண்டாம் எச்சரித்தனர். ஆடு முகமூடிஇல்லாமல் லாக் டவுன் விதியை மீறி சாலையில் சுற்றித்திரிந்தன. ஆகையால் அதனை கைது செய்தோம் என காவல்துறையினர் ஒப்புக்கொண்டனர்.
அது மட்டுமல்லாது மக்கள் இப்போது தங்கள் நாய்களுக்கு முகமூடி அணியச் செய்கிறார்கள்இ அதனால் முகமூடி அணியாத ஆடை ஏன்கைது செய்யக் கூடாது? என காவல்துறையினர் ஒருவர் கேட்டுள்ளார்.