திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்தும் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் 2.0 என்ற விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மேலும் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுடன் இணைந்து ஓட்டப்பந்தயத்தை மேற்கொண்டார்கள்.
இறுதியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஓட்டபந்தயம் முடிவுற்றது. ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துரையாடி, பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.