மதுரை: மதுரையில் தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் நல சங்கம் சார்பாக, தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக வந்தனர்.
ஊரடங்கு உத்தரவு கொரோனா பொது முடக்கம் காரணமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர விழாக்கள் நடைபெறாத காரணத்தால், தமிழகத்திலுள்ள பல லட்சம் கலைஞர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே ,தமிழக அரசு அருள்கூர்ந்து சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்,
நாட்டுப்புற கலைஞர்களுக்கு டோல்கேட்டில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையிலான தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் சங்கத்தினர் மனு கொடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















